தினம் கரைகிறேன் கற்பூரமாய் 555
உயிரே...
உனக்காக காத்திருக்கிறேன்
என்னவனே...
என் கரம் பற்ற
ஓடிவா என்றாய்...
எனக்காக காத்திருந்த
உன்னை காக்கவைத்தேனடி...
கரையும் கற்பூரமாய் கரைந்து
கொண்டு இருக்கிறேனடி தினம்...
கையில் வைத்திருந்த
மலர்கொத்தை தவரவிட்டதுபோல்...
என் தேவதை
உன்னை தவரவிட்டேனடி...
உன் சுவாசம் கலந்திருக்கும்
தென்றலைத்தான்...
நான் இன்னும்
சுவாசிக்கிறேனடி...
தென்றலில் உன் சுவாசம்
கலக்காத நிமிடத்தில்...
நானும் கரைவேனடி
மண்ணில் கற்பூரமாய்.....