திருட்டு கயவனே

அடா திருட்டுபயலே...

திருட்டு தனமாக
எழுத்து நண்பர்களின்
படைப்பை கையாண்டாய் ...

எங்கள் வார்த்தைகளில்
புரியும் வலிகளும் வேதனையும்....

எத்தனை வார்த்தைகள்
உன்னை சபித்து.....

படி படி ...

உண்மை கவிதைக்கு
சொந்தமானவர்களின் மன வலியை...

உணர்த்துக்கொள்....புரிந்துக்கொள்...
உண்மை ஒருபோதும் இருட்டிலே
உறங்காது என்று....

பல நாள் திருடன்
ஒரு நாள் அகபடுவான் ...

நீ இன்று திருடன் ...

இனி உறக்கம் வருமோ உனக்கு?

இல்லை உணவு தான்
உண்ண தோணுமோ உனக்கு?

உன்னை திருத்திக்கொள் ...

எங்கள் வேண்டுகோள் ஒன்று...

எங்களின் கவிகளை திருடி
கவினான நீ இன்றாவது
சுயமாக உன் முயற்சியில்
உன் அவமானங்களை கவியாக
வடிவமைத்து காட்டு...

நீயாக திருந்தினால் மட்டுமே
நீ மனிதன்....

திருட தெரிந்த உனக்கு
திருத்த தெரியுமோ ...

எங்களிடம் வார்த்தைகள் இல்லை...
உன்னை சபிக்க....

(தவறாக இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே...)

எழுதியவர் : சகிமுதல்பூ (19-Nov-14, 6:12 pm)
பார்வை : 96

மேலே