வானமும் கை கூடும்

வானமும் கை கூடும்.

நம்பிக்கை வை தோழா!
நம் கைகளே துணை தோழா!
சந்தர்ப்பம் காலம் தரும்—அதை
முந்திக் கொண்டு முயல் தோழா!

சக்கரம் சுழழ்கின்றது---காலச்
சக்கரம் சுழழ்கின்றது.—அதில்
சந்தர்ப்பம் தெரிகின்றது—நாம்
விழிப்புடன் முயலாமல்—அதை
பழிப்பது இயலாமை.

தேடி வரும் போது—நம்மை
தேடி வரும் போது—அந்த
வாய்ப்பும் வாசல் வரும்—நல்ல
வரவென ஏற்காமல்—விட்டு
வருந்துதல் தேடாமை.

ஓடும் உலகம் இது---பொழுதும்
ஓடும் உலகம் இது---யார்க்கும்
தேடியும் நில்லாது—ஒரு
பாடும் செய்யாமல்—உலகம்
பரிசொன்றும் தாராது.

நம்பிக்கை நலம் வேண்டும்---தன்
நம்பிக்கை நலம் வேண்டும்.—தம்
நெஞ்சினில் பலம் வேண்டும்—பிடி
கொம்பினை விட வேண்டும்.—திட
தம்மினில் எழ வேண்டும்.

வானமும் கை கூடும்—பொறி
ஞானமும் தீ ஊறும்---பெருஞ்
சேனையும் தோள் சேரும்---மனம்
தானது எனத் தேறும்---மலை
ஆனதும் தூள் தூறும்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (20-Nov-14, 8:10 pm)
Tanglish : vaanamum kai koodum
பார்வை : 297

மேலே