லஞ்சம் கையூட்டு
இனி ஒரு விதி செய்வோம் ...... அதை எந்த நாளும் காப்போம் ...
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை எரித்திடுவோம் ... என
அன்று பாடிய பாரதி நிச்சயம் இன்று இருந்தால்
ஆம் ஊழல் இல்லா உலகம் செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் ....
கடமையை செய்ய கையூட்டு பெறுபவன் கரங்களை உடைத்திடுவோம்
என்றே பாடியிருப்பார்........
ஆம் எங்கும் எதிலும்
காற்றாய் உறைந்து கடலாய் பரந்து
விரிந்திருக்கும் இந்த கையூட்டு ........
காணாமல் போகும் காலம்
கைக்கு எட்டும் தூரம் தான் ....
விழுந்து கிடந்தது போதும் மனிதா
எழுந்து வா .........
ஊழல் இல்லா உலகம் செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் ....
கடமையை செய்ய கையூட்டு பெறுபவன் கரங்களை உடைத்திடுவோம்