என் வலிகளில் சில -சகி

பிரிவே ....

நீ-நான்
பிரிந்து பல யுகங்கள்
கடந்துவிட்டது...

உன் நினைவாய்
உளறிக்கொண்டிருக்கிறேன் ...
என் வலிகளை உறவுகளிடம்...

விட்டுசென்றவனே...

என் மரணத்திற்கான
வழியை சொல்லாமல்
சென்றது ஏனடா ?

துடிக்கும் என் இதயத்தின்
வேதனையை நீ அறிவாயா?

மண்ணோடு மண்ணாக
புதையும் வரை என் வலிகள்
என்னை தொடரும்....

இந்த நிமிடம் வரை
நான் அனுபவிக்கும் வலிகளை
நீ உணரப்போவதில்லை ...

இனியும் உணரபோவதில்லை நீ....

தொடரட்டுமடா என்
வலிகள் -உன்
நினைவாய்....

வார்த்தைகள் இல்லையடா ...

என் வலிகளை சொல்லி முடிக்க
என்னிடம்....

எழுதியவர் : sagi (21-Nov-14, 1:13 pm)
பார்வை : 294

மேலே