பாவனைகள்

உன்
செல்லமான கொஞ்சலை காண
எத்தனை முறை வேண்டுமென்றே
முரண்டு பிடித்திருப்பேன் !!...

உன்
பொய்யான கோபத்தை காண
எத்தனை முறை வேண்டுமென்றே
சீண்டி பார்த்திருப்பேன் !!...

உன்
குழந்தை தனமான அழுகையை காண
எத்தனை முறை வேண்டுமென்றே
சண்டை பிடித்திருப்பேன் !!...

உன்
தாயை போன்ற பரிவை காண
எத்தனை முறை வேண்டுமென்றே
காயம் ஏற்படுத்தி இருப்பேன் !!..

அதனால்தான் என்னவோ ...

இன்று!!..
ஒரே ஒருமுறை வேண்டுமென்றே
என்னை(ஜீவனை) விட்டு விலகி சென்று
என் இதயத்தின் வலியை காண்கிறாயோ ??

எழுதியவர் : பிரதீப் நாயர் (21-Nov-14, 5:37 pm)
சேர்த்தது : பிரதீப் நாயர்
Tanglish : paavanaikal
பார்வை : 102

மேலே