மழலையும் கடவுளும்
டக் ... டக் ...... என்ற சத்தத்துடன்
கருவறை கதவை யாரோ தட்ட .....
கை கால்களை உதைத்துக்கொண்டு
தவித்து நின்றது மழலை ஒன்று ......
கதவை திறந்து கடவுள் சொன்னார்
ரகசியம் ஒன்று .....
ஆம் நாளை
எம்மை காணும் நேரம் உனக்கு
கண்ணை திறந்து பார் என்று ......
அப்படி ஆகட்டும் என்று மீண்டும் கண்ணயர்ந்தது
மழலை அன்று .... கடவுள் .......
எப்படி இருப்பார்....? என்ற கனவுகளோடு ......
விடிந்த பின்னும் உறக்கம் கலையாது
உறங்கி நின்ற மழலை ..... யாரோ
தன்னை இரக்கம் இன்றி ...... அறுத்துஎடுப்பதாய்
உணர்ந்த போது கடவுள் சொன்ன வார்த்தை
வந்து கருத்தில் உதிக்க ........
கடவுளை காண ஒரு கண்ணை திறக்க .....
ஒரு பெண் முகம் தெரிய .......
கடவுள் பெண் தானா ? என்ற
கேள்வி உதித்தது மழலையின் நெஞ்சில் ....
பின் மறு கண்ணும் திறக்க ......
ஓர் ஆண்மகன் தெரிய ......
கலவரமாகியது மழலையின் உள்ளம்
கடவுள் ஆணா...? பெண்ணா என்று ....?
அப்போது மீண்டும் வந்து கடவுள்
சொன்னார் ......
உன்னை சுமந்து நின்ற அந்த பெண்
உந்தன் அன்னை
இனி உன்னை சுமக்கவிருக்கும் அந்த ஆண்
உந்தன் தந்தை
இவ்விருவருமே நான் தான் என்று .....
மழலைக்கு அப்போது தான்
புரிந்தது இறைவன் யார் என்று ...?
ஆம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அவர்களை என்றும் போற்றுவோம் ....