தன் மனைவியை பற்றிய கணவனின் வர்ணனை

காலைக் குளிர் காற்று
கண் இமை தீண்ட !
உன் கைவிரல் கொண்டுசெய்த
தேநீர் தனை அருந்த !
அன்பால் எனை அணைக்கும்
அழகு தேவதை நீயடி!!!!

விரல் விட்டு எண்ணமுடியா !
அந்த நட்சத்திரக் கூட்டத்தில்
தொலைந்த விண்மீன் ஒன்று
என்வீடு தேடி வந்து !
என் கைவிரல் பிடித்து
என்னவளாய் ஆகிவிட்டாய்!!!!!

கருங்கல் பாறை தன்னில்
சிற்பியின் கரம் கொண்டு
தீட்டப்பட்ட சிற்பம் கொண்டு
தீந்தமிழாய் என்னுள்ளே வந்து
காதல் மொழி பேசும்
கவிஞனாய் எனை மாற்றியது !!!!

வண்ணங்கள் ஏதும் கொண்டு
தீட்ட முடியா ஓவியமாய்
வார்த்தைகள் ஏதும் கொண்டு
எழுத முடியா காவியமாய்
வாழ்வின் இறுதிமட்டும் உன்னுடன்
இணைந்திருக்க வேண்டுகிறேன் இறைவனை!!!!!

எழுதியவர் : நா.அன்பரசன்... (21-Nov-14, 7:04 pm)
பார்வை : 6649

மேலே