நான் யார்

நான் யார்?
இவன் யார்?
பேரில்லாதவன்
ஊரில்லாதவன்
ஓர் ஆகாய விருட்சம் போலே வேரில்லாதவன்.
அகம் கெடாமல்
பகைத்தொடாமல்
இதுவரையிலும் பொதுவரையிலும்
நானாய், நான் ஆணாய் வாழ்வழிகிறேன்.
என்னில் பழகாதார்
என் கோபம் விளங்காதார்
என்னோடும் அனபிலார்.
பிடிப்பின் திசைத்தேடும்
அவ்வழி இசைந்தோடும்
உங்களின் பசையாளன் நான்.
உன்போன்றே முன்தோன்றே
ஒரு முகவரிப்போலே முகமூடிக்கொண்டுள்ளேன்
நீங்களும் உங்களாய் காணக்கிடைக்கலாம்.
ஒரு அரசன் போலே
நானாய் என்னுள்ளே இயங்குகின்றேன்.
அத்திரம் கொல்லும்
அதங்கம் கொள்ளும்
அசௌகரயம்
என்னோடு பழகத்தெளியும்
நானும் உனபோலொருவன் உனக்கும் விளங்கும்
முகமொழிந்து பேசும்
பிறயிகழ்ந்து யேசும்
வேசிகள் போலின்றும்
எக்கனம் பார்த்தாலும்
அக்கனமும் உண்மையே நான்.
பேரிளம் பெண்டீருக்கு என்னை பிடிக்காம் போகட்டும்
யாரிவனோ என்று பிற்பாடு விளங்கட்டும்
அதுவரையில் நானாய் இருக்கவே இருக்கிறேன்.
என் அகமறியா முகமட்டும் அறிந்து
எங்கனம் என் முகவரி எழுதுகிறீர்கள்.
உன்போல் அவன்போல் இவன்போல்
நானில்லை...
எனக்கே என்னை விளங்க
என்னில் தேடுபவன் நான்.
என்னை புறந்தள்ளி பிறம்பேசி
கையாளாக சிறு இனபத்தினை புணர்கிறீர்களே?
என்னருகே நின்றுப்பாருங்கள்
என் பிரமிப்பு புரியும்
என் மர்மம் உடையும்.
பிறர்நிறை கவர்பவர்களுக்கும்
பொறாமை பொங்குபவர்களுக்கும்
கோல் மூட்டிகளுக்கும்
நான் சற்று மறுபட்டவன் தான்
உங்களால் என்னோடு ஓடிவர முடியாது!
என்னைப்பிடிக்கும் எனக்கு பிடித்தவைகளைப்பிடிக்கும் என்போர்க்கு
நானொரு அறியப்படாத சூர்யா-தேவா தான்.
உங்களின் பிம்பங்கள்பபோலே எங்கும் சிதறிக்கிடப்பவனில்லை
ஒரே பார்வைப்போல் அகக்கண்ணில் அகப்படுபவன்.
நான் நல்லவனென்றும்
நன்பண்புகளின் நாயகனென்றும் ஒருபோதும்
நியாயப்படுத்திக்கொள்வதில்லை...
முடிந்தால் வரையில் தவறுகளை திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.
"நான் பழகுவதற்கு இனிமையாக இல்லாவிடில்
குறைந்தபட்சம் நேர்மையாகவாவது இருந்திருக்கேன்".
நான் என்னைப்போல் ஒருவன்

எழுதியவர் : ராமசந்திரன் j (23-Nov-14, 1:13 am)
சேர்த்தது : ramj
Tanglish : naan yaar
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே