டீசெர்ஸ் Day

பொதுவாக ஆசிரியரைப்பிடித்தால் அப்பாடத்தில் பிடிப்பும் படிப்பும் தன்னிச்சையாய் வரக்கூடும்.
மாணக்களை அமைதிக்காக்க நகையோடு
பாடம் நடையோடு பண்படுத்துவதே சிறந்த படிப்பு.
ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியே பெயரிட்டு அழைப்பது அவனை நானும் உன்னை கவனிக்கிறேன் நீயும் என்னை கவனி என்பதாகும்.
எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார் என்பதல்ல கற்பித்தல்
எனக்கும் தெரிந்ததெல்லாம் நீயும்க்கண்டு தெளியவேண்டும் என்பதே கற்பித்தல்.
பாரம் இறக்குவதைப்போலே பாடங்களை இறக்குவோமானால் மாணாக்களுக்கு சுமைகள் ஆமைகள் போலாகும்.
இயல்பு மாறாமல் எளிமையாய் விளங்க கற்பிப்பதே கற்றோர்க்கு சிறப்பு!.
எழுத்தறிவித்தவன் இறைவனானான்
ஒழுக்கம் பயில்வித்தவனே ஆசானாவான்.
கற்றுக்கொள்வதற்கு வயதேதும் கிடையாது.
ஒழுக்கம் பழகுவதற்கு பள்ளியே சிறந்த தகவு.
எக்காலம் சென்றாலும் ஆசிரியர் மாணவரின் பெயரிட்டு அழைப்பாரெனில் உண்மையில் பேரெடுத்த மாணவன்.
ஒரு களிமண்போலே மாணவன் இருப்பானெனில்
ஆசிரியர் ஆக்கச்சில அச்சராவார்.
உளியறிவதில்லை வலிகளை
உளியுணரும் சிலைகளின் வழிகளை
சிலைப்போல் உளிகளை மதிப்பாரில்லை
உளிகளும் அவைகளை எதிர்ப்பார்பபதில்லை.
ஆகச்சிறந்தப் படிப்பு ஒழுக்கமே!
படிப்பவன் பாழாவதில்லை.
பயிற்றுவிப்பவன் கடவுளாகிறான்.
உன்போல் என்போல் கற்கவும் கற்றுக்கொடுக்கவும் ஆளாய் இருப்பவர்கள் ஆசான்களே!.
அலெக்சாண்டர்கள் பிறந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்...
அரிஸ்டாட்டில் தான் இதுவரை தென்படவில்லை!.

எழுதியவர் : ராமசந்திரன் j (23-Nov-14, 1:10 am)
சேர்த்தது : ramj
பார்வை : 93

மேலே