முதியோர் இல்லம்
அழுத குழந்தை
அவசரமாய் தேடி
கிடைத்தது புட்டிப்பால்
இரண்டாம் வகுப்பு
களிமண் புத்தி என திட்ட
சிறு மனம் தவிப்பு
குறும்பாய் ஆட்டம்
குரங்கு குரங்கு பேசாம
உறங்கு என சொல்வீச்சு
ஐந்தாம் வகுப்பு
ஆஸ்டலில் இருப்பு
ஆடிக்கொரு முறை கிடைப்பது விடுப்பு
இப்படியும் ஒரு படிப்பு
பத்தாம் வகுப்பு
கணக்கில் நூறு
கண்ணில் கண்ணாடியை பாரு
பன்னிரண்டாம் வகுப்பு
அனைத்திலும் மதிப்பெண் அதிகம்
பெற்றோரை மதிப்பதில் சிரமம்
கல்லூரி முடிந்தது
கலர் கனவு வந்தது
நல்லதொரு வேலை
அழகிய மனைவி
தொந்தரவாய் தெரிந்தது
வயதான பெற்றோர்
எங்கு குறை
யார் தவறு
இப்படித்தான் என சொல்லவில்லை
இப்படியும் உருவாகிறது முதியோர் இல்லம் என்பதில் மறுப்பில்லை