மழையே மழையே

மழையே...மழையே...

இப்போதெல்லாம், நீயும்
தனியாய் வர தயங்குகிறாய்...!!!
கோபமாய் புயலுடன்
புறப்பட்டு வந்து விடுகிறாய்...!!!

உயிரும், வயலும்
உலர்ந்திருக்க
வந்திறங்கிவிட்டாய்...

ஆனால் இங்கு,
ஏரிகள் நிரப்ப
ஏகத்துக்கு சண்டை...
ஏரியல் கொண்டு
போனது கறைகள்
ஆனால், ஏரிகளின்
கரைகள் துண்டாகிப்போனது...

பொக்கைவாய் கலன் (பொக்லைன்)
புண்ணாக்கிய ஆறுகளின்
தேகம் புரையோடிய
புண்களாய் பள்ளங்கள்...

கரைகள் கறைந்து கண்மாய்,
தூரோடு வாரிய குளங்கள்
குட்டைகளாய்...
கொழுப்படைத்த நாளங்களாய்
கால்வாய்கள்...

ஒற்றை நாளில்
உயிரை மாய்த்திடும்
ஈசல் பிறந்தது...
வண்டு பறந்து,
மலர்ந்தது பூக்கள்...

நீராதாரம்,
வயல்வெளி வேலை
செய்ய வாய்ப்பு
விவசாயிக்கு...
பச்சைப்போர்வை
விரித்தது வயல்கள்...

பஞ்சப்பிணி போக்க,
பட்டினிச்சாவு தடுக்க...
காலம் தவறாமல்
வந்துவிட்டுப்போ...
கோபமாகவாவது...!!!

மழையே...மழையே...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (22-Nov-14, 7:01 pm)
பார்வை : 981

சிறந்த கவிதைகள்

மேலே