பாரதி உலகம்
நானும் பாரதியும்
பாருக்குள்ளே
பார்த்துக்கொண்டோம்...
முண்டாசு கவி
மூர்க்கத் தனமாய்
கடத்திச்சென்றார் பாதை
மறந்த உலகுக்கு...,
அங்கே
மதம் பிடித்த மாந்தரைக்
காண்கிலேன்,
சாதி வாசம்
சற்றும் நுகர்கிலேன்,
கடலெல்லாம் கவிதை
நிரம்பி இருந்தது,
வானெல்லாம்
வசந்தம் நிரம்பி
இருந்தது,
அங்கே
ஒரு பெண் வீரப்பார்வையில்
வரவேற்றாள்...,
அவள் சூடாக
கவிதை சமைத்திருந்தாள்.,
போதை தெளியும்
பருகுங்கள் என்றாள்,,
திகட்டவே இல்லை
தீர்ந்து விட்டது,,,
கூடவே பாரதிக்கும்
எனக்கும் நிலவுத்தட்டில்
நட்சத்திர சோறு
பரிமாறினால்...,
எனக்கு விக்கியதும்
தென்றலை தேனில்
நனைத்து விழுங்கச்சொன்னாள்
விக்கல் நின்றது....,
வியப்பு வந்தது..,
பாரதி சொன்னார்
தாசா இது என்னுலகம்
இங்கே ஆணும் பெண்ணும்
சமத்துவ நதிக்கரையில்
நித்தம் நித்தம் காதல்
செய்வார்,,,
இங்கு யாவர்க்கும்
கவிதை தொழிழாம்,,,
போரில்லை,பூசலில்லை
சண்டையில்லை,சாதியில்லை
இங்கே காதலுண்டு,
காமமில்லை ஆதலால்
பிஞ்சுகளுக்கு பாலியல்
தொல்லையில்லை,,,
இங்கே அரசியல் இல்லை
ஆதலால் அடிமைகளில்லை,,
இங்கே இயற்க்கை அரசன்
கவிஞன் இளவரசன்.,,
அவர் பேசிமுடிக்கையில்
இளஞ்சூரியன் எழுதுகோலை
எடுத்து வந்தது,,,
வாளைப்போல் கையிலெடுத்தார்
கவிதை காட்டிலும்
போதையுண்டோ?
எழுது என
என்னிடம் கொடுத்தார்..,
வரமாக வாங்கிக்கொண்டேன்
நாளை வரை அவகாசம்
கேட்டு வந்தேன்,..,
இதோ முடித்துவிட்டேன்
பாரதியிடம் காட்டவேண்டும்
பாருக்குள் இல்லை
அந்த பாதை,
யாருக்கேனும் கிடைத்தால்
சொல்லுங்கள்
போதையில்லாமல்
சென்று வரலாம்
பாரதி உலகுக்கு,,,
-தாஸ்