காணாமல் போன கல்லறைகள் - கயல்விழி

தாயக கனவுடன்
சாவினை தழுவி
எம் மானம் காத்த தோழர்களே

தன்மானம் விற்று
தலைகுனியும் என் தமிழன்
நிலை வந்து பாரீரோ

ஈழ கனவினில் இன்னுயிர்
கொடுத்த என் உயிர் தோழர்களே
ஈழத்தை விற்று எதிரியை அணைக்கும்
ஈன தமிழன் நிலை வந்து பாரீரோ

வேண்டும் மீண்டுமோர் ஈழக்கனவென தமிழனின்
காதில் மெல்ல தான் உரைப்பீரோ

இல்லை

காலம் கடந்தபின் ஞானம்
எதற்கென காற்றிலே கரைந்து
செல்வீரோ.

எம்மை காத்திட வேண்டி
கண்மணி உங்கள்
கல்லறை தனை நாடி வந்தோம்.

உங்கள் கல்லறை இடித்து
கட்டடம் கட்டும் எதிரியை
பார்த்து தலைகுனிந்தோம்

ஈழத்தாய் மானம் காக்க
வீர தமிழனாய் வென்று
மடிந்த உன் கல்லறை
காத்திட முடியாத
வெட்கம் கெட்ட தமிழனாய் .!

எழுதியவர் : கயல்விழி (24-Nov-14, 11:49 am)
பார்வை : 217

மேலே