ஏற்றம் தந்த காதல் தோல்வி

பசுஞ்சோலையாய்
எனக்குள் இருந்த
கனவு அவள்!
வண்ணம் போன
சேலையாய் இன்று
என் கண்ணெதிரே...
எட்டிப்பிடிக்க நினைத்தேன்
அவளை நான்!
ஏழ்மையில் நான் அவளுக்கு
எட்டிக்கனியாய் கசந்தேன்!
கால மாற்றத்தில்
ஏற்றம் பெற்றது
என் வாழ்வு!
கண்ணீர் வழிகிறது
அவள் விழிகளில்
தவறவிட்ட வாழ்க்கைக்காக!
தடுமாறுகிறேன்
அவள் நிலை கண்டு!
கால ஓட்டத்தில்
அவள் இன்பமும்
என் துன்பமும்
அடித்துச் செல்லப்பட்டு விட்டன....

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (24-Nov-14, 4:23 pm)
பார்வை : 71

மேலே