மாறிடும் வாழ்க்கை

உண்ணும் உணவு
இருக்கும் வீடு
உடுத்தும் உடை
வாழ்க்கை முறை
எல்லாம் மாறிடவே
இருப்பதை விடுதலும்
பறப்பதை பிடித்தலும்
வழக்கமாய் ஆனதே !
தேவைகள் பெருகுதே !
அதனால்..
கொடுக்கலும் வாங்கலும்
குறைவின்றி நிகழவே
குடுமிகள் பிறர்கை
போய் சேருதே !

எழுதியவர் : கருணா (24-Nov-14, 3:57 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : maaridum vaazhkkai
பார்வை : 234

மேலே