கட்டி போட்டுவிட்டார்கள்
கட்டி போட்டுவிட்டார்கள்
நானும் இப்போது
ஆடு குட்டி தான் ,
பயத்தை சொல்லி கொடுத்தார்கள்
அழுதுகொண்டே
அழகாய் பயந்தேன் ,
சுவைத்து பார்க்க பாகற்காய்
கொடுக்கவில்லை
கசப்பை இன்று உணர்கிறேன் ,
ஏன் பிறந்தோம் ?
பிறந்தது
தவறில்லை
அறிவு பிறந்தது தான்
தவறு ,
என் உணர்வுகள்
முழுமையாக
செயல்படவில்லை ..