என் நினைவுடன் இணைந்தான்
கிளை விட்ட மரமே
நிழல் கொடுக்கும் இலையே
என் நிலமையைக் கொஞ்சம்
கேளாயோ...........
காற்றுக்கு நீ ஆடுகிறாயோ
இல்லை காற்ரோடு
உறவாடுகிறாயோ நான் அறியேன்
என் உள்ளம் காற்றாடி போல்
ஆடுவதை நீ கேளாயோ.......
அன்று ஒரு நாள் அந்தி
வேளையிலே செப்பக் குடத்துடன்
செம்பகம் நான் வந்த வேளை
அம்மாடியோ ஆத்தாடியோ
அந்த அதிசயத்தை நீ
மறந்தாயோ..........
அம்பும் வில்லும் ஏந்தி
வந்த அந்த அம்சமான
ஆணழகன் பாதம் உன்மேல்
பட்ட சுகத்தையும் நீ மறந்தாயோ......
இன்னும் ஏன் மௌனமோ
ஓ...உன்னை விடுத்து என்னை
நோக்கியதில் வந்த சோகமோ....
ஒற்றைக் கால் தூக்கி
நீரிலே ஓடும் மீனை குறி
வைக்கும் நாரையே
உன் குறி தவறினால் தாவி
வருவாயோ என் விழி மீனை
தொட்டு விட......
மீனம்மா மீனம்மா
குளத்தில் ஏதம்மா
உன் முகத்தில் நீந்துவதைக்
கண்டேனம்மா என்றானே
நீயும் செவி மடுத்துக்கேட்டாயே
மறந்தாயோ நாரையே......
நீர் எடுக்க வந்த என்
நெஞ்சில் நீர் போல்
அவன் நினைவு நிறைந்து
வழிய நீர் எடுக்க மறந்து
நான் நிட்கின்றேன்.....
நீ மட்டும் அழகாய்
நீந்துவது ஞாயமோ
தாமரையே....
நீரோடு ஒட்டாத உன்
இலை போல் எட்டாத
தூரத்தில்அவன் இருக்க
அவன் நினைவினிலே
நான் எனை மறக்க நிக்கெதியாய்
என் காதல் உள்ளதடி.....