காதலிக்கு எந்தன் முதல் பரிசு

♥♥♥காதலிக்கு என் முதல் பரிசு♥♥♥


விழியே உந்தன் நினைவுடன்
சென்றேன்
வியத்தகு பரிசு ஒன்று
வாங்க!


காதல் சொல்லும்
இதயம் அது வேண்டாம்!
பரிசாக!
என் இதயம் உன்னிடத்தில்
எப்பொழுதும் இருக்கையில்!


காதல் மலர் ரோஜா
ஒன்று வேண்டாம்!
என் ரோஜா மலர் நீ இருக்கயில்!


காதல் நினைவு தாஜ்மஹால் வேண்டாம்!
முன்னதாக ஒருவளுக்கு கட்டியது!


என் நினைவு என்றும் இருக்கும் வகையில்,
தரவேண்டும் எந்தன்
முதல் பரிசு!


என்ன தருவேன்?
அரிசி ஒன்றில் இருவர் பெயரது இணைக்க எமக்கும் ஆசைதான்!


வெளிப்படா காதல் இது உறைக்கும் வகையில்
தேர்ந்தெடுத்தேன் எந்தன்
முதல் பரிசு!


எவரும் சந்தேகப்படா வகை
எடுத்தேன்
எந்தன் முதல் பரிசு!
என் காதலி உமக்காக!


உந்தன் முதல் எழுத்து
பதித்த எந்தன் முதல் பரிசு!


இதயமதில் இதய தேவதை
உந்தன் முதல் எழுத்து!
உமக்கெந்தன் முதல் பரிசு!


தர முயலும் வேளை
தடைகள் பல!
தடைகள் தகற்க
நிச்சயம் தருவேன் ஒருநாள்
எந்தன் முதல் பரிசு!
♡♡♡

எழுதியவர் : சந்தோஷ் (25-Nov-14, 1:59 pm)
பார்வை : 143

மேலே