கண்ணீருடன் காதல் பேசுகிறது

சமர்ப்பணம் : அமில வீச்சுக்கு ஆளான அத்தனை தோழிகளுக்கும் .......


இது என் மரண வாக்கு மூலம்

காதலுக்கு கண் இல்லை என
நீங்கள் சொன்னதன்
காரணம் புரிகிறதெனக்கு

அந்த கடற்கரை மணல் வெளியில்
பரவி கிடக்கும் நீங்கள்
காதலினால் தொடுவதில்லை
தொடுதலுக்காய் காதலிக்கிறீர்கள்

தெரிந்தும்
கண் மூடி கிடந்தேன்

காதலை சொல்ல
கைகளில் கீறி
சுய வன்முறையில்
சுவிசேசம் சொன்னீர்கள்

சுருக்கென்றது
பொறுத்துக்கொண்டேன்

தாடி வளர்த்தீர்கள்
தண்ணி அடித்தீர்கள்
டாஸ்மாக் விற்பனை
காரண கருக்களில்
என்னையும் சேர்த்தீர்கள்

இயலாமையில்
இமை தாளிட்டேன்

உண்மை காதலை
உலகிற்கு சொல்ல
உத்தம புருஷர்கள் பலர்
தற்கொலை செய்தீர்கள்

காரி உமிழாமல்
கண்ணீர் வடித்தேன்

காதலுக்கு கண் இல்லை என
நீங்கள் சொன்னதன்
காரணம் புரிகிறதெனக்கு

இதற்கு பின்னும்
இயலாது என்னால்

அமிலத்தால் ஒரு
அழகு சிலை அழித்து
அந்த உத்திர வாடைக்கு

ஒரே காரணம்
நாநேன்றீர்கள்

சதை அறுந்து
முகம் குழைந்து
அவள் முனகுகையிளெல்லாம்
மூச்சு தினருகிறதெனக்கு

அவள் பெற்றோரின்
கண்ணில் வழிந்தோடும்
கரை கடந்த நீரெல்லாம்
என் மீது வழிகையில்
அவளின்
அமில சூடு
அறிய முடிகிறதெனக்கு

இதற்க்கு பின்னும்
இயலாது என்னால்

உங்கள்
துரோகத்தை வஞ்சத்தை
வாஞ்சையோடு பொறுத்த என்னை
ஆடை அவிழ்த்து
அம்மணமாக்கி விட்டீர்

இனி எந்த கொலைக்கும்
காரணம்
காதலாக கூடாது

மன்னியுங்கள் என்னை
தற்கொலை தவறு தான்
கடைசி தவறாக
இதுவே இருக்கட்டும்

எழுதியவர் : பிரபஞ்ச நேசன் (25-Nov-14, 3:12 pm)
பார்வை : 90

மேலே