கைப்பிடி ​சாம்பலே ​முடிவினில்

சதையாய் வந்திடும் மனிதா நீ
சாம்பலாய் போகிறாய் இறுதியில் !
​​உணர்வாய்​ ​உண்மையை நீயும்
​உயர்வாய் உள்ளத்தில் ​நிச்சயம் !​​

கைக்குழந்தை​ தானே ஆரம்பத்தில்​
​​கைப்பிடி ​சாம்பலே ​முடிவினில் !
கையில் அடங்கிடும் நம்இதயம்
கைவி​டும் நம்மையும் நிச்சயம் !​

​​​​கருவறை முதல் கல்லறைவரை
​கருத்தாய் வாழ்​பவர்கள் ​மிக​சிலரே !
​கருணையே இல்லாத மனிதர்கள்
கரங்கள் இருந்​தாலும் முடவர்களே​ !​

​உள்ளவரை நம்ஆட்டமும் பாட்டமும்
உடலானால் நடைபெறும் நம்முன்னே !
உள்ளவரை அழைப்பர் பெயர்சொல்லி
​உயிர்நீத்தால் ​நம்பெயரும் உடலன்றோ !

சுற்றங்கள் நம்மை சிலநாள் நினைக்கும்
உற்றநட்பும் சிலநேரங்களில் நினைக்கும் !
பெற்றதும் பற்றியதும் சிலகாலம் நினைக்கும்
பறந்திடும் காலமோ மறந்திடவே செய்திடும் !

இயற்கை கற்பிக்கும் பாடம் நமக்கென்ன
இறப்பு நிச்சயம் என்பதுதானே எவருக்கும் !
இருப்பினும் சிந்திக்க மறக்கிறது சிந்தையும்
இழந்ததை நினைத்து இல்லாததை தேடுகிறது !

​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Nov-14, 2:33 pm)
பார்வை : 173

மேலே