சாதி என்னும் சாத்தானே -சகி
********சாதி *********
சாதியே உனக்கு உண்மையான
சொந்தங்கள் இப்புவியில்
அதிகம் தான் ...
உன்னால் மாண்ட
உயிர்களும் அதிகம் தான்
இப்புவியில் ....
உருவம் இல்லை உனக்கு ...
உணர்வு உண்டு உனக்கு ...
அதுவும் அதிகார ஆணவ
தான் என்ற அகந்தை அதிகமாகவே
உண்டு...
உன்னை சொந்தம் கொண்டாடும்
உறவுகளை என்ன சொல்லி திருத்த ?
மனதால் நொந்துகொண்ட
மனிதர்கள் எத்தனை எத்தனை
பேர் உனக்கு தெரியுமா ?
மேல் சாதியாம்...
கீழ் சாதியாம்...
உன்னை மனிதர்கள்
பெற்றெடுக்கவில்லை ..
ஆனால் நீ உயிருடன்
வாழ உனக்கு நரபலியாக
எத்தனை காதல் பலியாகிறது
தெரியுமா ?
வார்த்தைகளில் சொல்லி விடுகிறான்
மனமே மனிதர்கள் சிலர் ...
சாதி இல்லை சாதி இல்லை
என்று ...
என்று உணரும் ?
எப்போது மாறும் ?
எங்கு மறையும் ?
பாகுபாடு இல்லாமல்
பழகும் நாட்கள் தான்
என்று ?
இந்த சாபமில்லா சாதி
என்னும் சனியன் ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
