கள்ளி காட்டு ரோசா
உசுர மடிச்சு கையில் தாரேன்
ஒம்ம ஓதட்டு சிரிப்ப தாரும்மையா
விட்டு விலகி நடக்கறப்போ
விதி விட்டு போக தோணுதய்யா....
காடு மேடு சுத்துரப்போ
கல்லு முள்ளு குத்தும் மாமா
எம் மனசு தாங்காது
கொஞ்சம் ஓரஞ்சாரம் பாத்து போ.....
மேலப்பட்டி சந்தையில
வாங்கி வாரீரோ கூரப்பட்டு....
வருவேனே ஒடனே நான்
ஒங்கூட ஆசைப்பட்டு....
வெட்கம் விட்டு கேட்டு புட்டேன்...
தயக்கமென்ன ராசா....
உன் தாலிக்காக காத்து கெடக்கு
கள்ளி காட்டு ரோசா....