சிரிக்கையில் அவள் கன்னத்தில் தோன்றும் குழி - தென்றல் உறங்க தொட்டில்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதை என்ற சொல்லுக்குள்ளும்
மெய் எழுத்துப் புள்ளி உண்டோ ? என
என் கண்கள் குழப்பமுற - அவள்
எழிலாய் சிரிக்கையிலே முகம் கண்டேன்......!!
கவிதை என்ற சொல்லுக்குள்ளும்
மெய் எழுத்துப் புள்ளி உண்டு...! அது
அவள் அழகாய் சிரிக்கையிலிலே அந்த
அழகு கன்னங்களில் தோன்றும் குழியே என்றேன்...!!