அன்பென்னும் மழை -10
(வர்ஷிதா தள்ளியதில் மரத்தில் மோதி விழுந்தான் வருண்.)
தள்ளியபின் கோபத்தோடு திரும்பி பாராமல் வேகமாக சென்றுவிட்டாள் வர்ஷு. வெகு தூரம் சென்றபின் திரும்பி பார்த்தாள் வருண் வரும் அறிகுறியே தெரியவில்லை.
தள்ளிய வேகத்தில் மரத்தில் மோதிநானே என்ன ஆச்சோ என்று தவித்தாள். மனம் கேட்காமல் மீண்டும் அந்த டதிர்க்கே ஓடினாள். அங்கே வருண் குப்புற விழுந்து கிடந்தான்.
ஐயோ என்ன ஆச்சு. அடி பட்டிருச்சா ? வருண் வருண் எதிரிங்க . குப்புற விழுந்து கிடந்தவனை திருப்பி எழுப்பி பார்த்தாள்.
பதிலே இல்லை. தலையில் அடிபட்டதே. ரத்தம் வருகிறதா என்று தொட்டு பார்த்தாள். இல்லை.
அவன் நெஞ்சில் காதை வைத்து கேட்டாள். துடிக்கிறதா, இல்லை துடிப்பது போல் நடிக்கிறதா . தெரியவில்லை படபடப்பில் .
மூச்சும் வரவில்லை. ஐயோ வருண் நானே உங்களை கொன்னுட்டேனா. நான் பாவி வருண் நான் பாவி.
நானும் தானே உங்க மேல ஆசை பட்டேன். உங்களை காதலிச்ச நானே உங்களை கொன்னுட்டேனே. நீங்க இல்லாம இனி நான் மட்டும் வாழ்ந்து என்ன பண்ண போறேன்.
இதோ இந்த அருவியல விழுந்து நானும் உங்களோடையே வந்திடறேன் வருண். வந்திடறேன்.
ஆமாம் , அதுதான் சரியான வழி. இதோ இப்பவே நான் வந்துடறேன், என்று அழுதபடி மழையின் உச்சியை நோக்கி ஓடினாள்.
அழுதபடி குதிக்க போகையில் அவள் கையை ஒரு கரம் பற்றி தடுத்தது. திரும்பி பார்த்தவள் அதிர்ந்து போனாள் சந்தோஷத்தில்.
ஆம் அவள் வருண் உயிரோடு புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தான். அவளுக்கு எதுவும் புரியவில்லை. வருண் நீக சாகலையே, உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்று கேவினாள்.
எனக்கு ஒன்னும் ஆகலை கண்ணம்மா. உன் காதலை தெரிந்து கொள்ளவே மயக்கம் வந்தது போல் நடித்தேன்.
என்ன நடித்தீர்களா? அப்படியானால் என் உணர்ச்சிகளை தூண்டி ......, ச்சே என்னை என்னவென்று நினைத்தீர்கள். அப்படியானால் நான் ஏமாந்திருந்த நேரத்தில் என் பெண்மையை திருட பார்த்தீர்களா?
நல்ல வேலை நான் தப்பிவிட்டேன்.
ஏய் நீ ரொம்ப கற்பனை பண்ணாதே வர்ஷு. சத்தியமாய் நான் உன்னை காதலிக்கிறேனடி பெண்ணே.
உண்மையை நீ புரிந்து கொள்.
எந்த உண்மையை.?
உன்னை பார்த்த நாளே நான் காதலில் விழுந்த உண்மையை.
இல்லை பொய், ஆளை மயக்க வந்தவள் என்று சொன்னவர் தானே நீங்கள்.
அன்று உன்னை பற்றி தெரியாமல் அப்படி சொல்லி விட்டேன். அதன் பிறகு நீ கொடுத்தே ஒரு லெக்சர். அதிலேயே உன்னை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டேன்.
அதன் பிறகு உன்னை இழக்க நான் என்ன முட்டாளா? எனக்கு மனைவியாகுற தகுதி உன்னை தவிர யாருக்கும் இல்லை.நீ தான் என் வாழ்கை துணை என்று எப்போதோ முடிவு செய்து விட்டேன்.
என்னை கேட்காமல் , அதை பற்றி முடிவு செய்ய நீங்கள் யார்?. உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.? உங்களுக்கு யார் அந்த உரிமையை தந்தது?
நன்றாக கேட்டுகொள். உன் மீதான என் உரிமையை எடுத்து கொள்ள யார் எனக்கு உரிமை தர வேண்டும்.
சொந்த மாமன் மகளை கட்டிக்கொள்ள எனக்கு இல்லாத உரிமையா?
என்ன சொல்றீங்க? யார் உங்கள் மாமன் மகள்.
சந்தேகமே இல்லாமல் நீதான் கண்ணம்மா. உன் அம்மாவிடமும் அனுமதி வாங்கியாயிற்று. இந்த ஜென்மத்தில் நீ என்னை விட்டு போகவே முடியாது.
இது என்ன புது கதை.
(தொடரும்)