புறாவை தூது விட

என் வீட்டு முற்றத்தில்
ஓர்நாள்,
வாடியிருந்த - என்
வதனம் கண்டு
வார்த்தைகளை தொடுப்பதற்காக,
நான்
வளர்த்த புறா ஒன்று,
என்னைப்பார்த்து கேட்கிறது....

"அன்பரே,
உன் சோகத்தின் பிறப்பிடம்
யாதென கூறுவீரா..? "
என்றது.
நானும்,
"இன்று என்னவளுடன்
பேசவில்லை" அதனாலே
என்றேன்.

அதற்கு புறாவும்,
"அவள் வாழ்விடம் நீ அறிவாயா?
உன் உணர்வுகளை நான்
எடுத்துரைக்க
உன்னவள் எங்கிருக்கிறாள்"
என்றது.
அதற்கு நானும்,
"அவள்,
வானத்தின் மாளிகையில்,
மேகத்தின் உறவுகளோடும்,
விண்மீன்களின் மொழிகளோடும்,
வாழ்ந்து வருகிறாள்"
என்றேன்.

அப்போது புறா,
இதற்காகவா நீ வருந்துகிறாய்,
உன் ஏக்கத்தை நான்
கலைப்பேன், நீ வருந்தாதே!
எனக்கு தானே இறைவன்,
பறக்கும் சக்திக்காக
இறகுகளை படைத்துள்ளான்,
நான் வானுக்கு சென்று
உன் நிலவோடு பேசி வருவேன்,

அதுவரைக்கும்
நீ கல்லறை பேசும்
மொழிகளை போல்
காய்ந்து கிடக்காதே!
எழுந்திரு! மகிழ்ந்திரு!"
வானை நோக்கி ,
என் நிலவுடன் பேச
பறந்தது.

அக்கணத்தில் தான்
என் உயிருக்குள்
ஒரு கேள்வி முளைக்கிறது.
"இறைவன் எனக்கும்
பறக்கும் சக்திக்காக
இறகுளை படைத்திருந்தால்....
நானும் புறாவைப்போல
வானை நோக்கிச்சென்று
என்னவளுடன், என் நிலவுடன்
என் ஏக்கத்தை தனித்திருப்பேன்,
அன்பு மொழி பிரியாமல்
பேசியிருப்பேன்,
ஏன் இப்படி நான்
புறாவை தூது விட....

எழுதியவர் : (26-Nov-14, 5:31 pm)
சேர்த்தது : Adam Biju1
பார்வை : 258

மேலே