விழிதிறந்து பாரேன்
விழிதிறந்து பாரேன் !!
என்னவளே !
உன் சுடர்விழி பார்வையினால்
எனதுமேனி திச்சுடர்கொண்டு எரியுதடி
எண்திசையெங்கும் தேடியும்
எனக்கென சிறுதுளி நீர்கூட கிடைக்கபெறேன்
ஒருதுளி நீர்
எனது மேனியில்பட
நிமிர்ந்து பார்த்தால்
கார்மேகம் கலைந்துவரும்
மழையினைபோல - என்னவள்
கண்களில் திட்டிய "மை" கலைந்து
கண்ணீரானது மழையென பொழியக்கண்டேனே !
உற்றார் உறவினரை மறந்து
உள்ளத்தை கொடுத்தவளே
என் இதயத்தில் அம்பு எய்தி போனாய்டி
சொட்டும் குருதியும் நம்முடைய
காதல் காவியத்தினை சொல்லுமடி
விழிதிறந்துப்பாரேன்
உன் கண்களில்
உனது காதலன் முகம்காண
அவளாக உள்ளேன் .