மனக்காயம்

தண்ணீரில் மிதக்கும் ஓடம் போல
ஒடுறேனே தனியா

மனசுக்குள் என்-ன மறச்சு நீயும்
போவது சரியா....?

இதுவர நானும் நெனச்ச துல்ல
எனக்குள்ளும் காதல் இருக்குதுன்னு

உன்-னப் பாத்ததுக் கப்பறம் தெரிஞ்சுக்கிட்டேன்
எனக்கென நீயும் பொறந்தேன்னு .................

போகுற போக்குல பாக்குற --உன்
பார்வ என்ன தாக்குதடி

என் மனசுல வந்த அந்த ஏக்கம்
இப்பத்தான தீருதடி ...........................

உப்பா இருந்த எம்மனச
தண்ணி ஊத்தி கரச்சவளே

என் மனசுல உன்--ன உப்பு மூட்ட
தூக்கிப் போறேன் தெரியலையா ..............

எழுதியவர் : ஜேம்ஸ் (26-Nov-14, 3:48 pm)
பார்வை : 146

மேலே