என் கரம் பிடித்தாய் என் காதல் கணவனாக

என்னை குழந்தையாய் பாவித்து ,
.
உன் கொஞ்சல்களுகிடையே ,
.
நம் காதல் பயணிக்க ,
.
வேலைகள் ஆயிரம் இருந்தாலும் ,
.
விவேகமாய் பயணித்தது நம் காதல் !!
.
தடைகள் பல கடந்து ,
.
கட்டிய துணியுடைனே வந்த என்னை ,
.
மனம் கோணாமல் கரம் பிடித்தாய் ,
.
என் காதல் கணவனாக ,
.
என்று உன்னை கரம் பிடிதேனோ ,
.
அன்றே கண்ணீர் துளி மறந்தேன்,
.
உன் அன்பால் என் கணவா !!
.
எனக்காய் பலவற்றை இழந்தாய் ,
.
உறவினரை கூட பல பிரிந்தாய் ,
.
ஆனாலும் உன் அன்பு குறையவில்லையே
.
என் காதல் கணவா !!
.
என் பெற்றோருக்கு நான் தலையாட்டும்
.
பொம்மைதான் !!
.
ஆனால் , அரியணை ஏறா அரசியாய்
.
உனக்கோ நான் !!
.
உலகம் அறியா உன் காதல் .
.
என் உள்ளம் அறியுமே
.
என் கணவா ♥♥♥
.
என் உயிர் வாழுமடா உனக்காய் என்றும் ,
.
சுமந்து கொண்டே உன் காதலை !!

எழுதியவர் : Aravinth Yohan (26-Nov-14, 4:12 pm)
பார்வை : 3730

மேலே