குற்றம்

என்னவள்
எந்தன் அன்பை புரிந்துகொள்ளவில்லை
அது அவள் குற்றமில்லை ...
ஆனால்
அவளிடம் அன்பை காட்ட
எவரும் கற்றுகொடுக்கவில்லை...
அது என் குற்றமாம் .....
பசி அறிந்த கன்று
பசுவின் மடி தேடி போவது குற்றமெனில் ....??
வாசம் அறிந்த வண்டு
பூவின் இதழை தேடி செல்வது குற்றமெனில் ....??
உளியின் வலிமை கொண்டு
கல்லை சிற்பம் ஆக்குவது குற்றமெனில் ....??
அவளிடம்
நான் காட்டும் அன்பெனும் குற்றத்தை
செய்துகொண்டே இருப்பேன்
என் இறுதி மூச்சு நிற்கும் வரை !!........