அன்றைய குலமகள் இன்றைய குடிமகள்-கயல்விழி

அதிகாலை கண்விழித்து
அரிசி மாவில் கோலமிட்டு
காலை கடன் முடித்து
கணவனுக்கு சேவை செய்து

பொங்கி வடித்து வைத்து
பொறுமையுடன் பரிமாறி
மீதம் உள்ள அடிசாததினை
அமுர்தமென அகமகிழ்ந்துண்டு

குடும்பம் கோயில் என்றும்
கூடிவாழ்வோர் தெய்வம் என்றும்
குலவிளக்காய் பெண்கள் அன்று
போற்றிவாழ்ந்தார் குடிசைகளில்

பத்துக்குமேல் கண்விழித்து
படுக்கையில் புருட்சனை தேடி
பருக தேநீர் இல்லையென்றால்
பல வர்ணத்தில் அர்ச்சனை பாடி

பக்கத்துக்கு வீட்டு தோழியுடன்
பகட்டான உணவகம் தேடி
கண்டதை முழுங்கிவிட்டு

மதுபான கடை சென்று
தயக்கம் இன்றி
மது பானம் வாங்கி

வீடு வந்து போதை ஏற்றி
குலமகள்
குடிமகளாய் வாழ்கிறாள் இன்று
மாட மாளிகையில் .!!

எழுதியவர் : கயல்விழி (26-Nov-14, 6:28 pm)
பார்வை : 232

மேலே