மதுவை நீயும் விட்டு விடு

மாது அவள் என் மடியில்
மது போதையில் அவளை தொட .........

தீண்ட தீண்ட இன்பம் தரும்
தேன் அமுது நான் இருக்க................

உதட்டு தேனில் ஒரு சொட்டு
உன் போதை ஏக்கம் தீர்த்திடுமே......

நீ மது அருத்தி என் அருகே
கண்ட நோயும் நம்மை நாடும்.........

நம் பிள்ளைகளும் பெற்றிடுமே
குடிகாரன் மகன் என்ற பட்டம்..........

காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
கலக்கம் நிறைந்த வாழ்க்கையை தான்......

மதுவை நீயும் விட்டு விடு
மனம் மகிழ வாழ்ந்திடுவோம்............

என்று அவள் கூறிடவே
காசு கொடுத்து பெற்ற போதை
கரைந்து போக நான் உணர்ந்தேன் ...........

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (26-Nov-14, 8:02 pm)
பார்வை : 109

மேலே