நீ சொல்லும் பொய் கூட.......

நீ சொல்லும் பொய் கூட எனக்கு
உயிர்க் கொடுத்திருக்கும் ,,,,,
நான் இறக்கும் தறுவாயிலாவது என்னைக்
காதலிக்கிறேன் என்று நீ கூறியிருந்தால்......

நீ சொல்லும் பொய் கூட என்னை
சொர்க்கத்தில் சேர்த்திருக்கும் ,,,,,
நான் கல்லறையில் கிடக்கும் நேரமாவது என்னைக்
காதலிக்கிறேன் என்று நீ கூறியிருந்தால்......

என்ன செய்வது காதலில்த் தோற்றவனுக்கு சொர்கத்திலும் இடமில்லையாம்......

உன் இதயத்தில்க் கிடைக்காத அந்த இடம்
சொர்க்கத்தில் மட்டும் எனக்கு எதற்கு........

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா...... (7-Apr-11, 5:30 pm)
பார்வை : 664

மேலே