அன்பென்னும் மழை-11 -தேவி

(முன் கதை சுருக்கம்: நீ என் மாமன் மகள் என்றான் வருண்)

இது என்ன புது கதை சொல்கிறீர்கள் என்றாள் வர்ஷு.
இது கதையல்ல நிஜம் கண்ணம்மா.
அன்று உன் அம்மாவிடம் அனுமதி வாங்க உன் வீட்டிற்கு வந்தேனே , அன்று உன் அப்பாவின் போட்டோ பார்த்தேன். அவரின் முகத்தை ஏற்கனவே என் வீட்டில் பார்த்த ஞாபகம்.

அதுதான் அவர் படத்தை என் செல்லில் போட்டோ எடுத்து சென்றேன்.
அன்று இரவு என் அறைக்கு வந்த என் அம்மா, வருண் இந்த பாலை மறந்துறாம குடிச்சிட்டு தூங்கு ராஜா, என்றார்.

அவர் சொன்னதே அவனுக்கு கேளாதது போல் ஏதோ யோசனையாய் அமர்ந்திருக்க, என்ன ராஜா, ஏதோ யோசனையாய் இருக்க.? என்னப்பா எதாவது குழப்பம்ன அம்மாகிட்ட சொல்லுப்பா.
வாய்விட்டு சொன்னா மனசு லேசாகிடும் ராஜா என்றாள்.

அம்மா , அன்று வீட்டில் மீட்டிங் வைத்த பொது வந்து உன்னிடம் பேசிகொண்டிருந்தாலே,

ஆமா, வர்ஷிதா, சொல்லுப்பா அவளுக்கென்ன ?

அம்மா அவளுக்கொன்றுமில்லை . வரும் ஞாயிறு ஷ்டாப்சை கொடைக்கானல் டூர் அழைத்து செல்ல இருக்கிறேன். இன்று வேலை முடிய கொஞ்சம் அதிக நேரம் ஆனதால் நானே அவளை அவள் வீட்டில் விட்டு விட்டு அவள் அம்மாவிடம் அனுமதி வாங்க சென்றேன்.

அப்போது அவர்கள் வீட்டில் அவளது அப்பா போட்டோவை பார்த்தேன். ஆனால் அதற்கு முன்னே நம் வீட்டில் அவர் போட்டோவை பார்த்திருக்கிறேன். அது தான் உங்களிடம் காட்டி கேட்கலாம் என்று நினைத்தேன் என்றான்.

எங்கே காட்டு என்று சொன்னவள் போட்டோவை பார்த்தவளுக்கு திகைப்பு கலந்த மகிழ்ச்சி.

வருண் இவர் என் அண்ணன். சித்தப்பா மகன். சிறுவயதில் நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒரே குடும்பமாய்.

அவர் உமாவை மணந்து கொள்ள வீட்டில் சம்மதிக்கவில்லை. வீட்டை எதிர்த்து உமாவை கரம்பிடித்தவரை உங்கள் தாத்தா வீட்டில் சேர்க்காமல் வெளியே அனுப்பி விட்டார். நானும் மும்பையில் செட்டில் ஆகிவிட தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

ஆனால் என் மனதில் அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறவேயில்லை. ஆனால் எப்படி தேடுவது என்று தெரியாமலே இருந்து விட்டேன். அன்று வர்ஷுவை பார்த்த பொது என் உள் மனசுக்கு தோன்றியதுப்பா. வர்சு என் அண்ணன் மகளாகதான் இருக்க வேண்டும் என்று.

ஆமாம் அம்மா, அவர்களும் மாமாவை இழந்து சோகத்தில் , யாரும் இல்லாதது போல் உணர்கிறார்கள். நீங்கள் சென்று பார்த்து விட்டு வந்தால் அவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள் அம்மா.

எப்படிப்பா உன் மாமா இறந்தார். உன் அதை எதாவது சொன்னர்கள.

ஒரு விபத்தில் இறந்ததாக சொன்னார்கள் அம்மா?
அப்படியா , அந்த நேரத்தில் அவர்களுக்கு தோல் கொடுக்க நமக்கு இதெல்லாம் தெரியாமல் போய்விட்டதே.
உமா ரொம்பவுமே இளகிய மனதுகாரி. அவளுக்கு அண்ணன் தான் உலகம் என்றிருந்தவள். இப்போது என்ன செய்வாள். அவர்களை நான் பார்க்க வேண்டுமே வருண்.

முகவரி தருகிறேன். சென்று பார்த்து வாருங்கள் என்றான்.

இன்று என் அம்மா உன் அம்மாவை பார்க்க உன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது விட்ட சொந்தம் ஒன்று சேர இருவரது அம்மாவும் பேசி ஒரு முடிவு எடுத்து விட்டதாக போன் செய்தார்கள்.

என்ன முடிவு?

அது, இந்த இளவரசியின் பூங்கரத்தை இந்த ராஜகுமாரனிடம் பிடித்து ஒப்படைப்பது என்று.
அதை சொல்ல உன் பின்னே ஓடி வந்தவன் தான் உன் அழகில் நிலை தடுமாறி , பிறகு நடந்ததுதான் உனக்கே தெரியுமே.

நம் காதலுக்கு முத்தாய்ப்பாய் இந்த குறிஞ்சிபூ கொத்தை பெற்று கொண்டு என் காதலை ஏற்று கொள்ளுங்கள் என்று அவள் முன் மண்டியிட்டு பூங்கொத்தை நீட்ட , அவள் கோபம் மறந்து வெட்கத்தில் சிரித்தாள்.

(தொடரும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (27-Nov-14, 10:18 am)
பார்வை : 213

மேலே