இந்தத் தலைமுறையின் அழிவு
வாசலில் கோலம் இயற்கையில்லை..
வாசல் தெளிக்க நீரே இல்லை !
வீட்டைச் சுற்றி செடிகளில்லை..
பாதம் வைக்க நிலமே இல்லை !!
கட்டாந்தரையும் இல்லை
களத்துமேடும் இல்லை ..
புடலங் கொடிக்கும்
பூசணிக் கொடிக்கும்
வித்தியாசம் தெரியவில்லை
இந்தத் தலைமுறையினருக்கு!!
மண்ணில் விழுந்தது முதல்
வீழ்வது வரை
இயற்கையிலிருந்து விலகி விலகி
உலகின் அழிவை நெருங்கிக்
கொண்டிருக்கிறோம்
நாம் !!