கலங்கரை விளக்கம்
பரிச்சை இல்லை..,
ஆசிரியரின்
அச்சுறுதல் இல்லை...
ஆனாலும்
வாஞ்சையாய் வாசிக்கிறது
நீலக்கடலை,,,
வாசித்த கடலையே
வாசிக்கிறது,
ஒற்றைக்கண்ணால்,
இரவும் நீள்கிறது,
வாசிப்பும் நீள்கிறது,
அவ்வளவா இருக்கு
கடலுக்குள்....
--தாஸ்--