கயலின் கனவு காதலன்

கற்பனையில்
நான் வரைந்த
என்னவனின் முழுவடிவம்
கண்முன்னே தோன்றிட
செய்வதறியாது
திகைத்து விட்டேன்
சிறு புன்னகை உதிர்த்தவன்
கலக்கம் வேண்டாம்
கயல்விழியே
கட்டி அணைத்துக்கொள் என்னை
இது வெறும் கனவு தான் என்றான்.!
கள்வனவன் சேட்டைகள்
கனவில் மட்டும் தொடர்வதால்
விழிகள் மூடி அனுதினமும்
அவன் வரவிற்காய்
காத்திருகின்றேன் .!!!