இப்படி துன்பம் தருகிறதே

இருள் சூழ்ந்து சூழ்ந்து ....
வரவர என் துன்பம் ....
தொடர் கதைபோல் ...
தொடர்கிறது பொழுதே ...!!!

காலை பொழுதுக்கு ...
என்ன நன்மை செய்தேன் ....
இனிமையாக இருக்க ....
மாலை பொழுதுக்கு ...
என்ன துன்பம் செய்தேன் ...
இப்படி துன்பம் தருகிறதே ...!!!

குறள் 1225
+
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 145

எழுதியவர் : கே இனியவன் (27-Nov-14, 4:06 pm)
பார்வை : 69

மேலே