நீலக்குயில் தேசம்5---ப்ரியா
(முன் கதை சுருக்கம் முதல் நாள் கல்லூரியில் நடந்த நிகழ்வை தன் தாயிடம் சொல்லவரும் கயல் காதல் பற்றி பேச்சுக்கொடுக்கிறாள் அப்பொழுது அவள் அம்மா ராஜலெட்சுமி மாதிரி பேசுறியே அப்டீன்னு ஒரு புது கதையை சொல்ல ராஜலெட்சுமி யாரென்று குழப்பமானாள் கயல்.)
என்னமா சொல்றீங்க ராஜலெட்சுமி யாரு?என்று புரியாமல் கேட்டாள்...?
அது இருக்கட்டும் காதலைப்பற்றி கேட்டா இல்ல அதைப்பற்றி முதலில் சொல் என்று பேச்சை மாற்றினாள் சுசீலா.
அம்மா எனக்கு காதலிக்க விருப்பமில்லை ஆனால்.........ஆனால் என்ன என்னடி சொல்லு என்றாள் சுசீலா...?
எனக்கு அடிக்கடி ஒரு கனவு வருதும்மா அது ஒரு புது இடமா இருக்குது அந்த இடமே வித்தியாசம் இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை மிகவும் அழகான தேசம்...பறவைகள் வாழிடமாய் இருக்குது அந்த சூழல் என்னை மிகவும் கவர்ந்தது அதில் ஒருவன் பறவைகளுடன் பேசிக்கொண்டிருக்கிறான் அவன் முகத்தை பார்க்கும் சமயம் கனவு கலைந்து விடுகிறது இதுவரைக்கும் அவன் முகத்தை பார்க்கவில்லை.......என்று ஏக்கமாய் தாழ்வான குரலில் பேசினாள் கயல்.
சரிமா கனவுக்கும் காதலுக்கும் என்ன சம்மந்தம் இது இந்த வயசுல எல்லா பொண்ணுங்களுக்கும் வரக்கூடிய கனவுதான் என்று சமாளித்தாள்.
ஆனால் கயல் விடுவதாய் இல்லை.......அம்மா எனக்கு கனவில் தினமும் அந்த உருவம் வந்த மாதிரி இருக்குது ஏதோ என் மனசுல ஒரு தடுமாற்றம் அந்த நினைவிலிருந்து மீளமுடியவில்லை ஏன் இப்படி என்று புரியவுமில்லை என்றாள்.
அதுக்கு நீ இப்போ என்ன முடிவு எடுத்திருக்கிறாய் என்று அம்மா கோவமாய் கேட்க?
கோவப்படாதீங்க அம்மா எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க கல்யாண மேட்டர்ல மட்டும் ப்ளீஸ் அம்மா ப்ளீஸ்.....என்று கெஞ்சினாள்.
சரி உன் விருப்பம் உனக்கு என்னதோணூதோ பண்ணு எதுனாலும் என்கிட்ட கேட்டுட்டு செய் என்று அம்மா சம்மதித்தாலும் உள்மனதில் ஒன்றை வைத்திருந்தாள் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை......!
சரிடி கல்லூரி புடிச்சிருக்கா அங்கு என்ன நடந்தது என்று வினவினாள்?அதுவாமா மிகவும் அருமையானக்கல்லூரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது........!
அப்புறம் அம்மா..... இவ்ளோ நாள் நிறைய பேர் என்ன பார்த்து காதலிக்கிறேன்னு சொல்லிருக்காங்க என்கிட்ட திட்டும் வாங்கிருக்காங்க இதெல்லாம் அம்மாவுக்கு தெரியும்தானே....?ஆனால் இன்று என் வகுப்பில் ராகேஷ் அப்டீன்னு ஒரு பையன் என்ன பார்த்தான்மா அவன் எந்த அர்த்தத்துல என்ன பார்த்தான்னு தெரில அவனோட பார்வையை என்னால நேரடியா ஏத்துக்கமுடில.....
அவனோட பார்வைல ஏதோ மந்திரம் இருந்த மாதிரி இருக்குது காந்தம் இரும்பை இழுத்தெடுப்பதைப்போல் என்கண்களை அவன்கண்கள் இழுக்கிறது...... ஆயிரம் அர்த்தங்கள்...! எத்தனையோ ஆண்டுகாலம் பழகியது போல் தோணுது அம்மா........அவன் பார்வை கண்வழியா ஊடுருவி இதயத்தை துளைக்கிற மாதிரி இருந்திச்சி இதுவரைக்கும் இந்த உணர்வு எனக்கு வந்ததில்லை என்று கேள்வியுடன் தாயை நோக்கினாள்.
உடனே தாய் "ஒருவேளை அந்த கனவுக்காதலன் இவனாக இருக்குமோ?"என்று சற்று கிண்டலுடன் கேட்டாள்.
இல்லை அம்மா அது இவனாக இருக்காது என்றாள் கயல்
எப்டி சொல்றா? தெர்ல ஆனா மனசு சொல்லுது இவனில்லைன்னு பார்ப்போம். இவனா இருந்தாலும் சந்தோஷம்தான் ஆனா எனக்கு கனவில் வருபவன்தான் வேணும் அதுவரை நான் காத்திருப்பேன்மா என்று தன் தாயிடமே சொல்லிவிட்டாள் கயல்.....!
சரி கயல் உன் விருப்பம் ஆனா எனக்குன்னும் சில விதிமுறை உண்டு அதுப்படி நான் சொல்றத கேட்கணும் என்னன்னு நேரம் வரும் போது சொல்றேன்னு அம்மா சொல்லிவிட்டு நகர முற்பட.......என்னம்மா எங்க போறீங்க?
ராஜலெட்சுமி விஷயத்த சொல்லாம போனா எப்டி? சொல்லுங்க என்று வற்புறுத்தினாள் கயல்.
(ம்...........சொல்றேன் என்று சொல்ல ஆரம்பித்தாள்.)
ராஜலெட்சுமி வேற யாருமில்லடி உன்னோட அத்தைதான் என்று ஒரு குண்டைத்தூக்கிப்போட்டாள்......அத்தையா?எனக்கா?என்னம்மா சொல்றீங்க நம் குடும்பத்துலதான் யாருமில்லைன்னு சொன்னீங்க இப்போ இப்டி சொல்றீங்க என்று தன் தாயை கேள்வியாய் பார்த்தாள்.
என் வீட்டுல நான் மட்டுதான் உண்டு உன் அப்பாவுக்கு ஒரு தங்கை உண்டு அவள் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.
"அண்ணி அண்ணி" என்று என்னிடம் உயிராய் இருப்பாள் அவளது காதலை என்னிடம்தான் முதலில் சொன்னாள்.அப்பொழுதுதான் எனக்கும் திருமணமான புதிது அண்ணி நீங்கதான் அண்ணன்கிட்ட சொல்லி அப்பா அம்மாக்கிட்ட அனுமதி வாங்கித்தரனும் என்றாள்.அவள் பேச்சைக்கேட்டு நானும் உன் அப்பாவிடம் சொன்னேன்.
அதன் பிறகு உ ன் அப்பா விசாரித்த பிறகுதான் விஷயம் தெரிந்தது ராஜலெட்சுமி காதலிக்கிற பையன் மிகவும் ஏழ்மையானவன் நம் குடும்பத்திற்கு ஏற்றவன் அல்ல என்று.......உன் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை தரம் பார்த்தனர் ஆனாலும் ராஜலெட்சுமி தன்காதலில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.
அதற்குக்காரணம் அவர்கள் இருவரும் 8வருடங்கள் உண்மையாக காதலித்ததுதான் காதலனை கைவிட அவளுக்கும் மனசு இல்லை தன் பெண்ணை அவனுக்கு கொடுக்க பெற்றோருக்கும் மனமில்லை இப்படியே நாட்கள் கடந்தது............
ஒருநாள் என்னிடம் இதேமாதிரி என்பிள்ளை மாதிரி பேசி என் சம்மதத்தோடு வீட்டைவிட்டு வெளியேறி விட்டாள் அதன் பிறகு அவள் என்ன ஆனாள் எங்கிருக்கிறாள் என்று எந்த தகவலுமே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுசீலாவின் கண்கள் மழையாய் பொழிந்தது.....................!
தொடரும்..........!