கையேந்துகிறேன்
விடை தேடும் பொழுதினில்
பலம் கொண்டு தாக்கும்
பசியினை நினைப்பதா...!
படைத்தவன் எழுதிய
விதியினை நோவதா...!
உணர்ச்சிகள் மடிந்து
அன்னிச்சையாய் அடுத்தவனிடம்
கையேந்துகிறேன்...!
பிச்சை எடுப்பதற்கு அல்ல
பிச்சையாய் வேலை பெருவதற்கு
தன்மானம் தலைகவிழுந்து
தாரை வார்க்கிறேன்
படித்து பெற்ற பட்டத்தினை
அச்சிடப்பட்ட பணம் என்னும்
காகிதத்தின் முன்னால்
இதை
படைத்தவன் தவறேன்பதா
இல்லை ஏழ்மையின் விதி என்பதா