அடிமைப்பட்டு கிடந்திருக்கலாம் ஆங்கிலேயனிடம்

அடிமைப்பட்டு கிடந்திருக்கலாம் ஆங்கிலேயனிடம்...!

மட்டை பந்து ஆட்டத்தில் மட்டுமே
வீறுகொண்டு எழுகிறது இந்தியன் என்ற நாட்டுபற்று...!

வெள்ளையன் ஆண்டிருந்தால்.....!

துர்நாற்றமடிக்கும் கூவம் தூர்வாரப்படிருக்கும்
ரயில்வே அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டிருக்கும்
அனைத்து நதிகளும் இணைந்திருக்கும்
கட்டிட கலை புத்துயிர் பெற்றிருக்கும்
பணம் பிடுங்கும் பச்சோந்தி கல்வி முறை மாறி இருக்கும்
வயிற்றுப் பசிக்கும் வாழ்க்கை பசிக்கும்
மாண்ட மக்களின் போராட்டம் முடிந்திருக்கும்
வழியோர குடியிறுப்புகள் மறைத்திருக்கும்

அழுது வாங்கிய சுதந்திரம் அல்லவா...!
அதனால் என்னவோ....!
மக்களுக்கும் வாங்க மறுத்து
மண்ணுக்கு வாங்கினாய்.....!

நம்மவர்கள் சட்டையில் குத்தும்
கொடியினை நெஞ்சினில் குத்துவதில்லை போலும்...!

நம் நாட்டு பெண்கள் கூட்டம் கூடி கற்பழிக்க
நம் நாட்டு குழந்தைகள் தெருவினில் பிச்சை எடுப்பதை பார்க்க
நெஞ்சினில் ஈரமின்றி இருக்க

என்ன அருகதை இருக்கிறது
சுகந்திர நாடு என்று மார்தட்டிக்கொள்ள
நல்ல காலம் வரும் வரை
அடிமைப்பட்டு கிடந்திருக்கலாம் ஆங்கிலேயனிடம்

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (29-Nov-14, 3:51 pm)
பார்வை : 201

மேலே