என் வரிகளில் வெண்மேகம் பெண்ணாக உருவானதோ - யாரடி நீ மோகினி

பொன்மேகம் உனைக்காண அலையாடுதோ
என் நினைவு உன் நெஞ்சில் நிலையாகுதோ

என் நெஞ்சில் உன் ஞாபகம்
ஓயாமல் வந்தாடுதே
என் நெஞ்சம் கொண்டாடுதே

காதல் உன் காதல் சொன்னாலென்ன
பாலை என்னில் மழை தந்தாலென்ன

என் நெஞ்சில் உன் ஞாபகம்
ஓயாமல் வந்தாடுதே
என் நெஞ்சம் கொண்டாடுதே

பொன்மேகம் உனைக்காண.....

எட்டா தவம் நீ , கிட்டா வரம் நீ
என்னை கவர்ந்திடவே அளவெடுத்து
செய்துவைத்த சிலை நீ

சந்தேகமின்றி உண்மை தானடி
இம்மண்ணினமே வாசம் பேசும்
முதல் மண்வாசம் நீ

தேவதை வாழ்வதால்
கோவையும் கோவில்
நாத்திகன் ஆத்திகன் ஆகிறேன்

நிலவே ,மலராய் நீயுன் கூந்தலில் சூட

கரைதேடும் அலையாக தினம் பாய்கிறேன்
உன் இனிமைக்குள் நிதம் மூழ்கி நான் மாய்கிறேன்


என் நெஞ்சில் உன் ஞாபகம்
ஓயாமல் வந்தாடுதே
என் நெஞ்சம் கொண்டாடுதே

பொன்மேகம் உனைக்காண...

மூச்சுக்காற்றொண்டால் மோட்சம் கொடுப்பாய்
அடி தேனே தோற்கும் பேச்சில் என்னை
மூழ்கவிட்டு எடுப்பாய்

புவிப்பூக்களின் எழில்மறைப்பாய்
அதைக்காண வேண்டி தவமிருந்தால்
நித்தமென்னை முறைப்பாய்

உன் மடி சாய்ந்திடும் வரம் அது கிடைக்க
உயிரையும் விடுவேன் நானடி ...

என் ஆசையின் உயர்வென்பது
உன் நாசியின் நுனி கொண்டது

பொன்மேகம் உனைக்காண அலையாடுதோ
என் நினைவு உன் நெஞ்சில் நிலையாகுதோ

என் நெஞ்சில் உன் ஞாபகம்
ஓயாமல் வந்தாடுதே
என் நெஞ்சம் கொண்டாடுதே

எழுதியவர் : ஆசை அஜீத் (29-Nov-14, 5:49 pm)
பார்வை : 225

மேலே