முதியோர் வேண்டும்

தள்ளாடும் முதுமையை
தாங்கிடும் சொந்தம் முதியோர் இல்லம்
ஏன் இந்த இல்லம்
ஆளாக்கி பேராக்கி வாழ வைத்த
பிள்ளை எங்கே/ பொண்ணு எங்கே/
அத்தனை சொத்துகைளையும் அள்ளித் தந்து
தமக்கு என எதுவும் இன்றி
வெறுங் கையாய் முதுமைகளும்

தள்ளாத வயது வரும் தமைக் காக்க
பிள்ளை உண்டு பொண்ணு உண்டு
பேரக் குழந்தைகளும் பாசமுள்ள செல்வங்களாய்
பாசமுடன் பார்த்திடுவார் என எண்ணி
ஆசையுடன் பாசத்துடன் ஏக்கத்துடன் முதுமைகளும்

என்ன இது முதுமை என்றால் ஏளனம் இளக்காரம்
பார்த்து பார்த்து வளர்த்த பட்டு முகங்கள் எல்லாம்
வெறுப்புடனே கண்ணோக்க வெதும்பி நிற்கும் முதுமைகளும்
எல்லாமும் பொய்யாகிப் போன மன உளைச்சல்
முதியோரை கூட்டிச் சேர்க்கிறது முதியோர் இல்லம்
நாலு வார்த்தை ஆறுதலாய்ப் பேசிட சொந்தங்கள் எங்கே
பெற்றதும் வளர்த்ததும் கொடுத்ததும் போதும் போதும்
யாரும் இல்லை ஏதும் இல்லை தனிமையே துணை

முதியோர் யார் உன் தாய் தந்தை உன் பாட்டன் பாட்டி
இவர்கள் உனக்கு பாரமாக ஏன் எண்ண வேண்டும்
கண்ணும் கருத்துமாய் வளர்த்த அவர்களே
உன் உண்மையான அன்பான சொந்தங்கள்
இந்த சொந்தங்கள் மீண்டும் நம் வாழ்வில் வருமா/

சற்று சிந்தித்தால் முதியோர் இல்லம் அணுக வேண்டியதில்லை
நம்மை நாம் காப்பது போல்
நம் அன்பு சொந்தங்களை அனுசரித்து காத்திடுவோம்
முதியோரின் அரவணைப்பில் அனுபவத்தில் வாழ்ந்திடுவோம்
முதியோர் வேண்டும் அவர்கள் நாம் வளரும் ஏணிப் படிகள்


ஆறுதலாய் பேசிட

எழுதியவர் : பாத்திமா மலர் (29-Nov-14, 9:40 pm)
பார்வை : 163

மேலே