மாற்றம் என்றும் மாற்றும்

துன்பம் வந்தால் அதிலே
துவண்டு நின்றால் கோழை
கூட வீரனாகி நம்மை
வெற்றி கொண்டு செல்வானே
இன்பம் தனை தொலைத்து
இருக்கும் வரை துன்பக்
கடலில் மூழ்க ஏன்
நாமே ஏன் வாழ்க்கை
கப்பல் விரிசல் விழ
காரணமாக இருக்க வேண்டும்...
தன்னம்பிக்கை கொண்டு தன்
முயற்சியால் துன்பத்தை எந்
நேரத்திலும் நமக்குள் பிடித்து
வைக்காமல் புறந்தள்ளி அக
வெளிச்சம் உருவாக உத்வேகம்
பெற்று உழைப்பின் துணை
கொண்டு துன்பத்தையும் இன்பமாக
மாற்றும் வித்தை கற்றுக்
கொள்ளும் மனிதர்களாக மாற
மாற்றம் என்றும் மாற்றும்
நம் துயர் வாழ்வுதனை..

எழுதியவர் : உமா (29-Nov-14, 11:34 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 57

மேலே