தோழியின் நினைவு
நாம் பழகியது சில
காலம்தான் தோழி.....
அதில் உன்மையான நட்பில்
பயணிக்கிறோம்....
யாரால் முடியும்
நம்மைப்போல்
நட்புறவு கொண்டாட ....
நாம் தெருவில் கை
கோர்த்து நடக்கையில்
நம் முன் நடை போடும்
நம் நட்பின் நாகரீகம் ...
நான் கவலை படும்
தருணம் உன் முகம்
பார்க்கையில் மழை துளியாய்
சிதறி ஓடும் ...
நீயும், என் தாயும்
வெவ்வேறு இல்லையடி ...
அவள் முகம் பார்த்து
விழித்தால் - உன் முகம்
பார்த்து கண் மூடுவேன்..
அழகான மழை
சாரலில் உன் தோல்
சாய்ந்து கை கோர்த்து
நடக்கையில் கண் முன்
தெரியுதடி உன் நட்பின்
பாசம்...
கஷ்டங்கள் வருகையில்
உன் மடி தேடுகிறேன்
கண்ணீர்கள் விழுகையில்
உன் கை நாடுகிறேன்...
இன்பம் வெளிப்படுகையில்
உன் புன்னகை வேண்டுகிறேன் .
நாம் ஒன்றுதான்
நட்பு தோட்டத்தில்....