முந்திரிக்காடு 2
சின்னராசு தாத்தா ..நடந்து கொண்டே கைத்தடியை ..தாங்கி தாங்கி ஒவ்வொரு அசைவிலும் நினைவைத் தோண்டுகிறார்......
முந்திரிக்காட்டின் பூர்வீகம் (தாத்தா -முத்தாயீ ஆயா ) பூங்காவன கிராமம் .....அப்போழுதுமுதல் தனது வாழ்க்கையே முந்திரிக்காட்டின் உயிர்மூச்சில் வாழ்ந்து வந்தார்கள்......
அன்றும் ......இளம் வயது காளை அவர் வீட்டிலிருந்து காட்டிற்கு செல்வது வழக்கமாகிக் கொண்டார்....வானம் பார்த்த பூமியாகையால் மழை பெஞ்சாதான் முந்திரிக்கும் வளம் செழிப்பு பருவம் கனிவு எல்லாம் ...அந்த ஊர் மக்களின் சொத்தும் ...
அந்த கிராமத்துப் பெண்டுகளெல்லாம் படிப்பறிவு இல்லைதான் ....கட்டுப்பாடான வாழ்க்கை தான் ...
'' நீ படிச்சுக் கிழிச்சது போதும் புள்ள... போய் முந்திரிக் கொல்லையப் பாரு....அதான் நமக்கு சோறு....உசுரு ல்லாம் ...'' அந்த கிராமத்து மக்களின் பெண்கள் நிலை ...
''பொண்ணு வயசுக்கு வந்தா... தலக்கி தண்ணி ஊத்தி 30 நாளைக்கு எந்த ஆம்பலைங்களையும் பாக்கக் கூடாதாம்...''இது முத்தாயீ ஆயா வீட்டுக் கட்டுப்பாடு
12 வயசிலே சமைஞ்சா 15 வயசிலே கண்ணாலம் கட்டிக் கொடுத்துடுவாக....மாப்ள பையனுக்கு 19 வயசிலேயே ......இப்படி கண்ணாலம் பண்ணி வந்தவதான் முத்தாயீ ஆயா ..
இப்படி கல்யாணம் செஞ்ச காலத்துலே முந்திரிக் காடே கதின்னு இருந்தார்கள் ...அந்த கிராம மக்களும் தான் ..
கொலை கொலையா முந்திரிக்கா
கொம்பு வச்ச முந்திரிக்கா
கெம்புகாது முந்திரிக்கா
தரைய தரைய குந்தக்கா
தாவிப் புடிப்பேன் கோணக்கா ....
ஆ ....ஆ....ஆ...
யாருடீ....எந்த சிறுக்கி டீ..... பாட்டுப் பாடுரவ....எட்டி ....ஓடாதீங்க டீ .....நில்லுங்கடீ ....
அய்யோ ! வாங்கடி அந்த ஆயா வந்துருச்சு ....ஒடுங்க ஒடுங்க.....
இப்படியே காத்து காத்து முந்திரியெல்லாம் பறிச்சு...அதிலிருந்த கொட்டைகளை எல்லாம் சந்தைக்கு போய் விற்று பொழைப்பு நடத்தினாங்க....
தன் பிள்ளைகள ....ரெண்டு பொண்ணு ...ரெண்டு பைய்யங்களையும் டவுனுலையே கண்ணாலம் கட்டிக் கொடுத்துட்டாங்க..... ...அவர்கள் எல்லாரும் நல்லா இருந்தாலும் ரெண்டு பேரு ..மனச மட்டும் சுமையா சுமக்குறாங்க ... ஒவ்வொரு நாளும் ....
தினமும் பவுர்ணமியானா அந்த கோவிலுக்கு சின்னராசு தாத்தா போறதும் ஆயா அழுவுரதுமா இருந்தது...
ஏன் ஆயா அழுவுற...? எப்போமே வழக்மா நடக்ரதுதான் ...தாத்தா கொவிலுக்குல்ல போய் கதவ சாத்றதும் ....நீ அழுவுறதும் ... எதுக்காக ? ஆயா .... அழாத ...என்கிறாள் சின்ன பாப்பா...வைத்தியர் மகள்
என்னத்த சொல்றது புள்ள....இன்னமும் என் நெஞ்சிலே நிக்கி.... அத்த எப்டி புள்ள மறப்பேங் ..வருஷம் 20 ஆச்சு... அவ மனசும் ஆரப் போறதில்ல..இவரும் ஓயப் போறதில்ல புள்ள......
சரி ஆயா...த்தா தாத்தா வந்துட்டாரு ...போய் சூடா.... சுக்கு கஷாயமும்..வரக் காப்பியும் போட்டுக் கொடு ஆயா... நா வாறே ....
என்ன அந்த சம்பவம்....பாப்போம்.....