வானில்லா வானவில் -வித்யா

வானில்லா வானவில்-வித்யா

வானில்லா
வானவில்லாய்
வண்ணம் தொலைத்து

உனக்குப்பிடித்த
உணவுகள் வெறுத்து
உன் அபிமான
உடைகள் தவிர்த்து
நீயில்லா இரவுகளில்
வெற்றுத்தரையில்
உன்நினைவுகள்
விரித்துப் படுத்துக்
கிடக்கிறேன்.........

உனக்கோ பணி நிமித்தம்
எனக்கோ காதல் நிமித்தம்

என்உடையா
வளையல்களும்
கசங்கா சேலைகளும்
நீயில்லா நாட்களிலெல்லாம்
ஆயிரம் கவி சொல்லும்........!!

எழுதியவர் : வித்யா (30-Nov-14, 6:16 pm)
பார்வை : 199

மேலே