எம் மாவீரர்கள்

எம் மாவீரர்கள்

எம் மாவீரர்கள்

சூரியனை தொட்டு விட முடியாது!
சந்திரனை தொட்டுவிட முடியும்.
ஆனால் வாழ்ந்திட முடியாது?
எம் மாவீரர்களும்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுடைய
சூரிய புதல்வர்களே !
அவர்களின் தியாகங்களும்
நெருங்க முடியாத அளப்பெரியதே!
நீர் நிலம் காற்று வானம் நெருப்பு
இந்த ஐம்பூதங்கள் உள்ளவரை
மாவீரர்கள் புகழ் ஓங்கும்
தமிழ் வாழும்!
வாழும் காலத்தில்,
ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுவோம்
பகை மறந்து!
மாவீரர்களின் தியாக நாளினிலே
புனிதமானவர்களாக,
புனிதர்களை நேசிப்போம்.
கரம் கோர்ப்போம்!
நெஞ்சார்தமாக ஒன்றுபட்டு,
நாளைய சந்ததியின்
வாழ்வுக்காய்
தமிழனாய் தரணியாள
தளம் அமைப்போம்!
தன்மானத் தமிழன் வருவான்……..

கவிஞர் கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (30-Nov-14, 6:20 pm)
சேர்த்தது : kavithasan
பார்வை : 118

மேலே