நிலவும்,நிழலும்

வானத்து
முழு நிலவின்
உடல் முழுதும்
வழியும் சீழுடனே
கலந்த குருதி வாடை!
பாவம் படுத்திருக்கிறாள்! கடைசி காலத்தை எண்ணியபடியே!
இதயம் எழுப்பிய
அதிர்வுகளைத்
தாங்கிக்கொண்டே
அருகே சென்றேன்!
அழுகையும்,அலறலும்
ஒருசேர!
படுக்கையில்
கிடந்த நிலவின்
வலிமுனுகலை கேட்க
இருகாதுகள் போதவில்லை!
அவசரமாதலால்
அவசியமான
மருந்தை எடுத்துத்
தடவ எத்தணிக்க!
அருகிலேயே அதட்டியது அக்குரல்!
அடேய்!! நிறுத்து அவளைத்தொடாதே
என்றொரு குரல்!
குரலே காட்டிவிட்டது
அதன் திமிறை!
திரும்பி பார்க்கையில்!
தீராத பணப்பசியுடனே!
பாதாள பூதம்போலே!
ஒருவன்
நிழலாடுகிறான்
அவனொரு நிழலாதலால்!
கவனம் திரும்பாது கண்ணில் ஒளியேற்றி
மீண்டும் மருந்தை எடுத்தேன்
மீளாத்துயருக்கு சிறிதேனும் ஆறுதலுக்காய்!
நிறுத்து!
உன் செயலை!
நிரந்தரமாய் நீயும்போய்
சேருவாய்! நரிகளுக்கு
இரையாவாயென்று
எச்சரித்து சிரித்தது
அதே குரல்!
குரலின் வீரியத்தை
குரங்கும் அறிந்திருக்கும் போலும்!
அலறியடித்தபடி கீச்சிடுகின்றன அவைகள்!
மருந்திடத்தான் போகிறேன்!
தடைச் செய்ய நீயாரென்று கேட்டுவிட்டு! அவசியமான மருந்தை
அனுவனுவாக கைகளில்
ஏந்தினேன்!
அசுர சக்தியுடனே!
அகிலம் அதிரும்
குரலில் அவனது
சிரிப்பு மீண்டும் தொடர்ந்ததில் பச்சிகளே மிரண்டது!
சற்று சிரிப்பினை ஒதுக்கிவிட்டு ஓய்வுகூட தராமல் நான்யாரென்றா கேட்டாய்!
இதோ! இந்நிலவை
கிணற்றுத் தவளையாக்கி
முதியோரில்லத்தில்
முடங்கி கிடக்க வைத்த
முதல்வனாவேன்!
நானே இந்நிலவின் மூத்தப் புதல்வனாவேன்!
முடியட்டும் இந்நிலவின்
கதை!
மருந்திடாதே!
மரணம் உனைத் தழுவ
மார்பினில் எட்டுதைப்பேன்! சொல்லிட்டு சோர்விலாமால்
மீண்டும் சிரித்தது
அக்குரல்!
இனி பொறுமையே இழிவாகுமென்று!
வெகுண்டெழுந்த
என் குரலில் அவனுக்கோர் எச்சரிக்கை
விடுக்கப்பட்டது!
அடபாதகனே!
பாசத்தை அறிவாயா நீ!
பாலும் , தேனும் உனக்கூட்டி! பசியை தான்பெற்று!
படிக்கவைத்த பாமாலையை! பாவியெனச் சொல்லும்
உனையடைக்கி!
இந்நிலவுக்கு அபிஷேகம் அளிப்பேனென,,,,,
அடுத்த வார்த்தை வருமுன்னே! அழுத்திபிடித்தது அக்கைகள்!
அங்கம் அதிர்ந்துபோனேன்! அதிகாரம் இதுதானோ!
பகைவன் பிடிப்புக்கும்
பாசப் பிடிப்புக்கும்
பக்குவம் அறிந்ததால் அக்கை நடுக்கத்தை நானறிவேன்!
யாரது! யாரது! என்கைப்பிடித்தது யாரது!
அம்முழுநிலவு தானோ!
காற்றோடும், மழையோடும்,
கானக்குயிலோடும்,
பாசத்தை பற்றவைத்த
அம்முழுநிலவே தான்!
விம்மி அழுதபடியே!
கண்ணீரும் வற்றியபடியே! பாதிசொல் விழுங்கி மீதமிருந்த சொல்லை என் செவிகளில் தெளிக்கிறாள்!
யாரெனத் தெரியாதவனே! என் வயிற்றில் பிறவா
என் மகனே! அவனும் என்மகன்! சபிக்காதே!!!
பத்து மாதம் சுமந்த வயிறு பதைபதைக்கிறது!
என்காலம் இறுதிகாலம்!
அவன் காலம் வாழுங்காலம்!
வலிகளையும் வசைச்சொல்லையும் அவன் தாங்கமாட்டான்!
அவனை பெற்ற இவ்வுடலுக்கும் அதைத்தாங்கும் சக்தியில்லை!
வளர்த்த மடியும்
சுமந்த இடுப்பும்
சுருக்கெனக் குத்துகிறது!
சபிக்காதே!!!
அவன் நிழலையாவது நிம்மதியாக பார்க்கவிடு!
கடைசி வார்த்தைகளில்
குரலொலி குழந்தையாகி
கெஞ்சியது!
கண்ணீரில் நனைந்தபடி! இருகரங்களை பற்றிக்கொண்டு! கரைபடிந்த சீழுடலின்
மீதே நானிருந்து!
திரும்பிப் பார்க்கையில்
திட்டிய நிழலைக்
கானவில்லை!
நிம்மதி இன்னமும் வரவில்லை!
அடுத்த பார்வை மருந்தின் மீது விழ! அவைகளும் கானவில்லை! அதிராதீர்கள்!!! அன்பெனும் ஆன்மா
உயிரோடுதான் உள்ளது!
நிழலின்று நிஜமாகி
கரி பூசியிருந்த அப்பிள்ளையின் கரங்களில் தான் அம்மருந்துள்ளது!
பாசத்தின் பக்குவத்தை பார்த்தீரோ!
பாருக்குள் பாசங்கூட பாவமன்னிப்பளிக்கும்!
பணப்பேராசையினரே!
பெற்றவளை போற்றுங்கள்! பெற்றவளை
பேணுங்கள்!
இன்றைய மகன்
நாளைய தகப்பன்
நீயும் போகவேண்டுமா முதியோரில்லத்திற்கு! இது தொடரும் பூமியா! மூடுங்கள் முதியோரில்லத்தை!
முழுமனிதம் இன்னும்
மரணித்துப் போகவில்லை!
முழு நிலவும் மரணத்தை எட்டிவிடவில்லை! பாசத்தால்,பக்குவத்தால், அன்பால், அரவணைப்பால்!
வாழும்,வாழவிடும்,
வாழவைக்கும்,
நம் மனிதம்! இதுவே இவ்வுலகின் புனிதம்!

எழுதியவர் : அரும்பிதழ் சே (30-Nov-14, 8:54 pm)
பார்வை : 110

மேலே