அடமானம் தன்மானம்

இனிய உளவாக ..
என்றைக்கோ
பள்ளியில்
பரீட்சைக்காக
படித்தது..
மறந்து போனது
அரசு வங்கியின்
அதிகாரியானபின் அவளுக்கு !
வயதானவர்கள் கூட
தப்புவதில்லை
அவளது கடிந்த சொல்லுக்கு !
மகனின் படிப்புக்கு
வீட்டை அடமானம்
வைக்க வந்த ஏழை முதியவரின்
தன்மானத்தையும்
அடகு கேட்டது ஆணவம்..
செயலிழந்து வேடிக்கை
பார்க்க வேதனைதான் மிஞ்சியது !

எழுதியவர் : கருணா (30-Nov-14, 10:01 pm)
Tanglish : adamanam thanmaanam
பார்வை : 162

மேலே